Loading...
நடிகர் கமல்ஹாசன் எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அப்படித்தான் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இவர் பேசுகையில் தன் அரசியல் பார்வை குறித்து மனம் திறந்தார்.
இதில் திராவிடம் இன்னும் சில நாட்களில் அழிந்துவிடும் என்று மத்தியில் ஆள்பவர்கள் சொல்கிறார்களே என்று நிரூபர் கேட்டார்.
அதற்கு கமல் ‘திராவிடத்தை ஒரு போதும் அழிக்க முடியாது, எப்படி மொழி, இனம் ஒன்று இருக்கின்றதோ அதே போல் தான் திராவிடமும்.
Loading...
இன்று நான் சொல்கிறேன் யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது, முடிந்தால் செய்யுங்கள், இப்படித்தான் திராவிட கட்சிகள் ஒரு போது ஜெயிக்க முடியாது என்று சொன்னார்கள்.
ஆனால், இன்று திராவிடம் தான் நம் தமிழகத்தை ஆள்கின்றது’ என அதிரடியாக பேசியுள்ளார்.
Loading...