பாடசாலை மாணவியொருவரை கடத்தி துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இரு இளைஞர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 23ஆம் திகதியிலிருந்து மாணவி காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையிலேயே குறித்த மாணவியுடன் இரு இளைஞர்கள் கொட்டகலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
தொலைபேசி அழைப்பு மூலமே அறிமுகமான இளைஞர் ஒருவர் , திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பாடசாலை மாணிவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.
ரொசல்ல-மாணிக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி அழைப்பு மூலமே அறிமுகமான இளைஞர் ஒருவரும், அவரது நண்பர் ஒருவருமே குறித்த சிறுமியை துஸ்பிரயோகப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ஹற்றன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.