வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற தமிழ் மத்திய மகாவித்தியலாய மாணவன் மாலையாகியும் வீடு வரவில்லை என்று தாயார் நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை 3 மணிக்கு தனியார் கல்வி நிலையத்தில் தனது வகுப்புக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அனுராஜா லலோசன் என்ற 14 வயதுடைய மாணவன் 3.30 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும் தனது துவிச்சக்கரவண்டியை தனது சுகோதரி அதே கல்வி நிலையத்தில் கல்வி கற்று வருகின்றார் அவரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்து விட்டு தனியார் கல்வி நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளதாக மாணவனுடன் கல்வி கற்கும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர் என்று தாயார் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என்று பாடசாலையினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் குறித்த மாணவனின் வீட்டிற்கு விளக்கத்திற்குச் சென்றுள்ளதாகவும் தாய் தந்தை வீட்டில் இருக்கவில்லை குறித்த மாணவனுடன் பொலிசார் கலந்துரையாடிவிட்டுச் சென்றுள்ளனர். எனினும் இது குறித்து நேற்றுக் காலையே தந்தைக்குத் தெரியவந்துள்ளது.
மாணவனுக்கும் தந்தைக்கும் சிறு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் நேற்று மதியம் சாப்பாடு உண்டுவிட்டு தாயிடம் தனியார் வகுப்புக்குச் செல்வதாக சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியாகியும் மாணவன் வீடுவரவில்லை. இதையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.