கன்னட திரையுலகை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் விரேஷ். இவர் கன்னடத்தில் நிறைய படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அங்கு கதை விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, அந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தம் கொடுக்கும்படியான வார்த்தைகளை அந்த பெண்ணிடம் பேசியுள்ளார். மேலும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து நைசாக நழுவிய அந்த பெண், தயாரிப்பாளரை அறையில் பூட்டிவிட்டு தனது உறவினர்களிடம் சென்று தகவலை கூறியுள்ளார்.
இதையடுத்து, தயாரிப்பாளர் அடைத்து வைக்கப்பட்டிருந்து வீட்டிற்குள் நுழைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தயாரிப்பாளர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், இதுகுறித்து போலீசுக்கும் தகவல் அளிக்க, விரைந்து வந்த போலீசார் விரேஷை கைது செய்துள்ளனர். தயாரிப்பாளர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.