ஊடகங்களில் காட்டப்படும் அரசியல் அபத்தங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொனராகலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் தொடர்பில் பல விமர்சனங்கள் உள்ளன.
தற்போது நாட்டில் ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. ஊடகங்களில் இரவு செய்திகளை பார்க்கும் எமக்கு நெருக்கமானவர்களே அரசாங்கம் நாளை கவிழ்ந்து விடும் என்று எண்ணுவதாக என்னிடம் கூறுகின்றனர்.
இவ்வாறு பலர் அரசாங்கம் குறித்து பலவிதமாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
எனினும் ஊடகங்களில் காட்டப்படும் அரசியல் அபத்தங்கள் மூலம் அரசாங்கத்தை அப்படி கவிழ்த்து விட முடியாது என்பதை நான் தெளிவாக கூறவேண்டும்.
அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை இந்த அரசாங்கம் நீடிக்கும். அடுத்த பொதுத் தேர்தலுக்காக அரசாங்கம் என்ற வகையில் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்.
நாட்டை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்து, அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது எனது கடமையும் பொறுப்புமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.