Loading...
கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவ் மற்றும் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கெப்டன் அசோக் ராவ் கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியதுவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
Loading...
மேலும், இந்த சந்திப்பின் போது யாழ். குடாநாட்டின் தற்போதைய பாதுகாப்பு, மற்றும் நல்லிணக்க செயன்முறை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் உள்ள இந்திய தூதுரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கெப்டன் அசோக் ராவ் அண்மையில் பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...