பெரம்பலூர் மந்திரவாதி இறந்த பிணங்களை வைத்து பூஜை செய்து கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்த மந்திரவாதி கார்த்திகேயன் இறந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்து மாந்திரீகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
6-ம் வகுப்பு வரையே படித்துள்ள கார்த்திகேயன், அவரது தாத்தாவிடம் மாந்திரீக தொழில் கற்றுள்ளார்.
இந்நிலையில், இறந்த உடல்களை வைத்து மாந்திரீக சக்தியை அதிகரிக்க பூஜை செய்ததும், இதற்காக ஏராளமான மனித மண்டை ஓடுகளை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மந்திரவாதி கார்த்திகேயனுக்கு உடந்தையாக இருந்த மனைவி நசீமா, சென்னை ஈச்சம்பாக்கம் சவுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத்குமார், சதிஷ், தன்ராஜ், மணிமாறன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், கடந்த 7 வருடங்களாக மாந்திரீக தொழில் செய்து வந்த அவரிடம் முக்கிய பிரமுகர்கள் பலரும் அரசியல்வாதிகள் பலரும் சென்று குறி கேட்பது, ஜாதகம் பார்ப்பது என்று சென்று வந்துள்ளனர்.
மேலும் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் கடல் குதிரைகள் போன்றவைகள், பெண்களை வசியப்படுத்தும் மை டப்பாக்கள், பில்லி, சூனிய தகடுகள், ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், அதன் மதிப்பு ரூ.7 லட்சம் எனவும் தெரிய வந்துள்ளது.
இதையறிந்த பொலிசார், மந்திரவாதியையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மந்திரவாதி பயன்படுத்திய சொகுசு கார், விலையுயர்ந்த விநாயகர், காளி சிலைகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.