இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை புதிய பரிந்துரைகளையோ நிபந்தனைகளையோ விதிக்கவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 34ஆவது கூட்டத் தொடரில், ஐ.நா. ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சமர்ப்பித்த அறிக்கையில் அவ்வாறான விடயங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லையென தெரிவித்துள்ள பிரதியமைச்சர ஹர்ஷ, கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இன்னமும் இரண்டு வருட காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உள்ளக விசாரணை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இந்த தீர்மானத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காமையே தற்போதைய சர்வதேச அழுத்தத்திற்கு காரணம் எனவும் பிரதியமைச்சர் ஹர்ஷ குற்றஞ்சுமத்தியுள்ளார்.