எத்தனைப் பெண்கள்தான் கதற, கதற கற்பழிக்கப்படுவார்கள், தனியாக சாலையில் ஒரு பெண் நடந்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அதையும் மீறி ஒருவா் நடந்து சென்றால் அந்த பெண்ணை, அலேக்காக தூக்கிக் கொண்டு சென்று கதற, கதற கற்பழித்துவிடுவார்கள்.
தன்னுடன் பணியாற்றும் ஆண் நண்பருடன் சென்றாலும், நண்பர்களே, மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண்களை குரூப்பாக கற்பழித்து விடுகின்றனா்.
இதோ டெல்லியில் மீண்டும் ஒரு சம்பவம்
டெல்லியின் தெற்கு பகுதியில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் உறவினரான விகாஸ் என்பவர், கடந்த சனிக்கிழமை சந்தித்தார். அப்போது, விகாஸ் அந்த பெண்ணை தனது பிளாட்டிற்கு அழைத்து சென்றார்.
வழியில் மேலும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டனர். 4 பேரும் வீட்டிற்கு சென்ற போது, அங்கு ஏற்கனவே 2 பேர் இருந்துள்ளனர். 5 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மது குடிக்க வைத்தனர்.
இதில் மயக்கமடைந்த அந்த பெண்ணை, 5 பேர் விடிய, விடிய பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த அந்த பெண், அவர்களிடமிருந்து தப்பிக்க 20 அடி உயரமுள்ள பால்கனியிலிருந்து குதித்தார்.
அங்கிருந்து கிழிந்த ஆடையுடன் தெருவில் நடந்து சென்றார். இதனை பார்த்த பொது மக்கள் யாரும், அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
ஒருவர் மட்டும் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்சென்டரில் வேலைபார்க்கும், விகாஸ், லக்சய் பல்லா, நவீன், ஸ்வரீட், பரதீக் ஆகியோரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகா் டெல்லி தொடருது பெண் கற்பழிப்பு சம்பவம், இதை தடுத்து நிறுத்த முடியாம மத்திய, மாநில அரசுகள் தவிக்குது என்ன கொடுமை சார் இது.
டெல்லி என்றால் முதலில் அது இந்தியாவின் தலைநகரம் நினைத்தார்கள், ஆனால் இன்று அது கற்பழிப்பு நகரமாக மாறிவிட்டது.