தனது கணவன் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட மறுத்ததால் கணவனின் ஆணுறுப்பை மனைவி வெட்டி துண்டாக்கிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் காஸியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ரீட்டா யாதவ் எனும் பெண்ணே கணவரின் ஆணுறுப்பை துண்டித்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது 28 வயதான ரீட்டா யாதவுக்கும் பிரகாஷ் யாதவுக்கும் 11 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
கடந்த 10 வருடகாலமாக தன்னுடன் தனது கணவன் பாலியல் உறவில் ஈடுபட மறுத்ததால் தான் ஆத்திரமடைந்ததாக ரீட்டா யாதவ் தெரிவித்துள்ளார்.
கல்லாலான ஆட்டுக்கல் ஒன்றினால் பிரகாஷ் யாதவை ரீட்டா யாதவ் தாக்கியதாகவும், அவர் மயங்கி வீழ்ந்த நிலையில், அவரின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டித் துண்டித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பொலிஸாரிடம் ரீட்டா யாதவ் சரணடைந்தார். நண்பர்களின் உதவியுடன் பிரகாஷ் யாதவ் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு டாக்டர் சௌரப் குப்தா தலைமையிலான மருத்துவர்கள் 5 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை செய்ததன் மூலம், ஆணுறுப்பை மீளப் பொருத்தினர்.
தற்போது பிரகாஷ் யாதவ் ஆபத்தான கட்டத்தைக் கடந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரீட்டா யாதவ் இது தொடர்பாக கூறுகையில், “என்னை வெறுப்பதாக எனது கணவர் என்னிடமே கூறுவார்.
எனது முகத்தை பார்ப்பதற்குத்தான் விரும்பவில்லை எனவும் அவர் கூறுவார்.
தினமும் எமக்கிடையில் சண்டை ஏற்படும். வேறொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளப்போவதாக அவர் என்னைஅச்சுறுத்தி வந்தார்.
எனக்கு பிள்ளைகளைப் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக அவரிடம் நான் கெஞ்சினேன். ஆனால், அவர் என்னைத் தவிர வேறு யாருடனாவது பாலியல் உறவில் ஈடுபடப் போவதாக கூறினார்.
பல வருடங்களாக அவரிடம் நான் சித்திரவதையை அனுபவித்தேன்” எனக் கூறியுள்ளார்.