அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ளார். மோகன்லால்-அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம்தான் இவர் அறிமுகமானது. தமிழில் பிரபுதேவா-தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘தேவி’ படததில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அபிஜித் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் அந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் இரண்டு சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கிறதாம். அதாவது இந்த படத்தில் இடைவேளை என்பதே கிடையதாம். அதேபோல், இப்படத்தில் பாடல்களும் கிடையதாம்.
இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.