எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய விளையாட்டு போட்டிகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தென்னாபிரிக்காவின் டர்பான் நகரில் நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய விளையாட்டுக்களை கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் என உருவாக்கப்பட்ட அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தென்னாபிரிக்கா பூர்த்தி செய்ய தவறிய பட்சத்தில், போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை டர்பான் நகரம் இழந்துள்ளதாக குறித்த அமைப்பின் தலைமை நிர்வாகி டேவிட் கிரெவெம்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பொதுநலவாய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான நாட்டை தெரிவுசெய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் போட்டியிட்டு வந்த நிலையில், இறுதியில் அந்த வாய்ப்பை கனடா பெற்றது. ஆனால் தங்களால் போட்டியை நடத்த இயலாது என்று கனடா அறிவித்தது.
இதனால் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்டது. அதன்படி பொதுநலவாய போட்டிகளை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் ஆபிரிக்க நாடாகவும் இது விளங்கியமை குறிப்பிடத்தக்கது.