Loading...
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதி இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவிருப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும், அண்மைக் காலத்தில் இந்தியா செல்லும் திட்டம் எதுவும் தற்போது ஜனாதிபதியிடம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
Loading...
திபெத்தியத் தலைவர் தலாய் லாமாவின் பங்கேற்புடன், இந்தியாவின் பீஹார் மானிலத்தில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள விழாவொன்றில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளதாக குறித்த பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
Loading...