குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனத்துடன் ரியலைன்ஸ் ஜியோ நிறுவனம் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைவரும் வாங்கக் கூடிய விலையில் தயாராகும் இந்த ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் இவ் வருட இறுதிக்குள் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கூகுள் முத்திரையின் உதவியுடன் வெளிவரும் இத் தயாரிப்புகள், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் சந்தையில் ரியலைன்ஸ் ஜியோவிற்கு சிறந்த வரவேற்பை பெற்றுக்கொடுக்கும் என்றும் கருதப்படுகின்றது.
இதேவேளை ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மாத்திரமின்றி, கூகுள் மற்றும் ரியலைன்ஸ் ஜியோ நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் தொலைக்காட்சி சேவைகளுக்கான புதிய மென்பொருட்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.