இந்த உலகில் பெண்ணாக பிறப்பது கொடுமை..! மிருகமாக,விலங்காக பிறப்பினும் அவைகளுக்கு பாதுகாப்பு இல்லை.! நாம் எந்த உலகில் வாழ்கிறோம் நண்பர்களே…?
மேடவாக்கத்தில்தெருவில் நின்றிருந்த பெண் நாயை ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.
அதனைக் கண்ட சிலர் புளூகிராஸ் பொதுமேலாளர் டான் வில்லியம்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறை அதிகாரிகளுடன் அந்த இடத்திற்குச் சென்ற வில்லியம்ஸ், பலாத்காரம் செய்யப்பட்ட பெண் நாயை மீட்டு வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையின் முடிவில் அந்த பெண் நாயை பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக நாயை பலாத்காரம் செய்தவர் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புளூகிராஸ் சார்பில் புகார் செய்யப்பட்டது.
இதனடிப்படிப்படையில், காவல்துறையினர் நாயை பலாத்காரம் செய்தவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து முருகன் மீது இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளுதல் என்ற சட்டத்தின்படி ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.