அஜித்தின் விவேகம் திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை 50 கோடி இந்திய ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு பிரபல நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகின்றது.
விவேகம் திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை அந் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாயின், ரஜினியின் 2.o படத்திற்கு பின்னர் அதிக விலைபோகும் திரைப்படம் என்ற இடத்தை விவேகம் பெற்றுக் கொள்ளும்.
ஹொலிவூட் திரைப்படம் போன்று தயாராகி வருவதாக கூறப்படும் அஜித்தின் விவேகம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த திரைப்படம் திரைக்குவரும் நாளுக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக விரைவில் டீசர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள போதிலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணியில் சில பாடல்கள் படமாக்கப்பட உள்ளதாம். அதன் பின்னர் விரைவில் டீசர் வெளியிடப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.