Loading...
இளைய தளபதி விஜய் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக தான் ஒவ்வொரு படத்திலும் நடிப்பார்.
இந்நிலையில் அவர் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம் குஷி. இப்படத்தின் முதல் பாடலில் விஜய் தலைகீழாக காலில் கயிறு கட்டி ஒரு அருவியில் குதிப்பார்.
Loading...
இந்த காட்சிக்கு முதலில் டூப் இருந்ததாம், ஏனெனில் அந்த அருவி மிகவும் அபாயகரமானதாம். கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருக்க, எஸ்.ஜே.சூர்யா டூப் வைக்க ஏற்பாடுகள் செய்தாராம்.
ஆனால், விஜய் பலரும் சொல்லி கேட்காமல், தானே டூப் இல்லாமல் அந்த காட்சியில் நடித்துக்கொடுத்துள்ளார். இதை பல பேட்டிகளில் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
Loading...