மானபங்கம் குறித்து நடிகை அளித்த ரகசிய வாக்குமூலம் எப்படி சமூக வலைதளங்களில் வெளியானது என்பது குறித்து கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்துள்ள கேரளாவை சேர்ந்த இளம் நடிகை கடந்த மாதம் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையின் முன்னாள் கார் டிரைவர் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நடிகை போலீசாரிடம் அளித்த ரகசிய வாக்குமூலம் சமூக வலைதளங்களில் கசிந்து தீயாக பரவியது.
நடிகை போலீசாருக்கு அளித்த வாக்குமூலம் எப்படி சமூக வலைதளங்களில் கசிந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகையின் வழக்கை விசாரிக்கும் போலீஸ் குழு தான் வாக்குமூலம் கசிந்தது குறித்தும் விசாரித்து வருகிறது.