அன்றாடம் நாம் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், கொழுப்புக்கள் உடலில் தங்கி, அதிகப்படியான உடல் பருமனை ஏற்படுத்தி, இதய நோய், மாரடைப்பு போன்ற உடல் ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
எனவே நமது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை கரைக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.
பார்லி
தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இதை சாப்பிடுவதால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
கத்திரிக்காய்
கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு,நார்ச்சத்து அதிகம் உள்ளதால், எனவே இதனை சாப்பிடும் போது, உடலில் கொலஸ்ட்ரால் குறையும்.
மீன்
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் விட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எளிதில் குறைக்கலாம்.
நட்ஸ்
நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். மேலும் இதை சாப்பிடுவதால், இதயத்தை ஆரோக்கியமாக இருக்கும்.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
ஓட்ஸ்
ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. எனவே இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. எனவே கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகமாக உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவுகிறது.