Loading...
யாழ்ப்பாண மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் பெண்ணொருவர் மீது நேற்று கோடரித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
ஆடியபாதம் பகுதியில் ஒப்பனை அலங்கார நிலையமொன்றை நடத்திவந்த குறித்த பெண்மீது நேற்று இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Loading...
அலங்கார நிலையத்திற்குள் புகுந்து குறித்த பெண் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபரை காவல்துறையினர் உடனடியாகக் கைதுசெய்துள்ளதுடன், படுகாயமடைந்துள்ள பெண்ணை உடனடியாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இத்தாக்குதல் நடைபெற்றதென காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
Loading...