ஒபாமா கொண்டு வந்த சுகாதார சேவை திட்டத்தை டிரம்ப் அரசு ரத்து செய்வதன் மூலம் மக்கள் தங்கள் சுகாதார காப்பீட்டை இழக்கக்கூடும் என ஒரு அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்தே பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக போன ஆட்சியில் ஒபாமா கொண்டு வந்த சுகாதார சேவை திட்டத்தை அதிரடியாக ரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
இந்த திட்டத்தை டிரம்பின் குடியரசு கட்சி ரத்து செய்தால் 14 மில்லியன் மக்கள் தங்கள் சுகாதார காப்பீட்டை இழக்கக்கூடும் என அமெரிக்காவின் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் இதை அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பழைய திட்டம் ரத்தாகி வரப்போகும் புதிய திட்டத்தில், குறைந்த செலவில் அதிக தேர்வுகளை கொடுக்கும் காப்பீட்டை பொது மக்கள் பெறுவார்கள் என கூறியுள்ளார்.