Loading...
பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள் மிகவும் ஆபத்தானது. எனவே இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.
பல்வலி வாய் துர்நாற்றம் பிரச்சனைகளை போக்க இயற்கையில் அற்புதமான வழிகள் இதோ!
Loading...
பல்வலியை போக்க என்ன செய்ய வேண்டும்?
- கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்க வேண்டும்.
- கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
- வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பற்களின் மேல் பகுதியில் வைத்தால், பல் வலியை விரைவில் குறைக்க முடியும்.
- ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தால், பல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
- இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், பல் வலி உடனடியாக குணமாகிவிடும்.
- உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து, அதை பல் துலக்கினால், பல்வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
- எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து, அதை கொண்டு பல் தேய்த்தால், பற்களின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.
- ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம், பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் புண்களை குணமாக்கலாம்.
- கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால், பல்வலி விரைவில் மறையும்.
குறிப்பு
திடீரென்று பல் வலி ஏற்பட்டால் மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ச்சியான மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Loading...