சாப்பாடு வாங்கி தருவதாக கூறி இரண்டு சிறுமிகளை கற்பழித்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (25) இவர் சில தினங்களுக்கு முன்னர் அவர் வசிக்கும் பகுதியில் மாலை நேரத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு 12 வயது ஏழை சிறுமியிடம் சென்று, பக்கத்தில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கிறது.
நீ பாத்திரம் எடுத்து வந்தால் உனக்கு சாப்பாடு வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.
இதை நம்பி மஞ்சுநாத்துடன் சென்ற அந்த சிறுமிக்கு அவர் உணவு வாங்கி தராமல் தனிமையான இடத்துக்கு கூட்டி சென்று சிறுமியை கற்பழித்துள்ளார்.
பின்னர், சிறுமியை அவள் வீட்டில் இறக்கி தப்பி சென்றுள்ளார். இதே போல அடுத்த நாளும் வேறு ஒரு சிறுமியை ஏமாற்றி மஞ்சுநாத் கற்பழித்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர், இது குறித்து இரு சிறுமிகளின் பெற்றோர்களும் பொலிசில் புகார் அளிக்க தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.