சூர்யா தற்போது பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது தயாரிப்பில் கடுகு படம் வெளியாகவுள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியபோது :-
என்ன தடங்கள் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் நடத்தி காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில் தான் வரும். எனக்கும் அந்த அனுபவம் இருக்கு.
மறுபடியும் ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா, ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகனும் என்று எனக்கு ஆசை வந்தது.
சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் நந்தா போன்ற படங்களில் நடித்தேன். சில படங்கள் மனசார பண்ணனும் என்று தோன்றும். அந்த வரிசையில் கடுகு ஒரு படமாக தெரிந்தது. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் படம் பிடிக்கும்.
நான் ஒருவரை சந்தித்தேன், அப்போது அவர் உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்க என்றார். அப்போது எனக்கு மற்றவர்கள் மார்க் போட்டதை காட்டிலும் நான் குறைவாக மார்க்
போட்டேன், அதைப் பார்த்த அவர், மத்தவங்க உங்களுக்கு அதிகமாக மார்க் போட்டிருக்க நீங்க ஏன் குறைவாக போட்றீங்க, என்று கேட்டார்.
உங்கள உங்களுக்கு பிடித்தால் தான் மற்றவர்களுக்கு பிடிக்கும், என்பது போல மாற்றினார்கள். அதுதான் இந்த படமும். பண்ணுவதற்கு. அதுமட்டும் அல்ல, இன்னும் பல விஷயங்கள் இருக்கு. கடுகு நல்ல படம், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும்.