இலங்கை நாடாளுமன்றம் தற்போதைய ஆபாச வார்த்தைகள் கற்பதற்கான சிறந்த இடமாகியுள்ளதென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சி என கூறிக் கொள்ளும் குழுவினர் செயற்படும் முறை மிகவும் மோசமாக உள்ளதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இதனால் ஜனநாயகத்திற்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுவருவதாக பேராசிரியர் எம்.ஓ.ஏ டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.