மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 04 வயது சிறுவன் ஒருவர் அடித்துக்கொலை செய்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் வளர்ப்பு தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா மாதர் வீதியில் நேற்று இரவு 04 வயது சிறுவன் ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனின் வளர்ப்பு தாயார் ஒருவர் சிறுவனை தாக்கிய நிலையில் அவரை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தாகவும், அது தொடர்பில் வைத்தியசாலை தரப்பினரால தகவல் வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குறித்த வளர்ப்பு தாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றதடவியல் பிரிவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் குறித்த சிறுவனை சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே ஒரு பெண்பிள்ளையினை தத்தெடுத்துவளர்த்து வந்த நிலையிலேயே, குறித்த சிறுவனையும் தத்தெடுத்து வளர்த்துவந்துள்ளதாகவும் அயவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.