சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ரெஜினா கஸாண்ட்ரா, ராம்தாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மாநகரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கியிருந்தார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரும், இன்னும் சில தயாரிப்பாளர்களும் இணைந்துள்ள பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
பலராலும் பாராட்டப்பட்ட இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியும் கண்டுகளித்துள்ளார். படத்தை பார்த்தபிறகு அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ” ஒரு phone call “கண்ணா ஹா ஹா” அவர்தான் அவரேதான் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மாநகரம் பார்த்துவிட்டு… இன்னிக்கு தூங்கனமாதிரிதான்..” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் ரஜினி போட்டு பேசியுள்ளார். ரஜினியின் பாராட்டால் பூரித்துப்போன எஸ்.ஆர்.பிரபு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஏற்கெனவே வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்தையும் ரஜினி பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.