கோயிலுக்குச் செல்லும் பெண்களை பூசாரியின் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கர்ப்பமானதாகக் கூறப்படும் பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் 45 வயதான கோவில் பூசாரியால் 15 வயது சிறுமி நிறைமாத கர்ப்பமாகியுள்ளார். சிறுமி கர்ப்பமானதால் குறித்த சிறுமியை அக் கிராமத்தில் உள்ள உறவுக்கார இளை ஞனுக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சித்துள்ளனர். இந்நிலையில் குறித்த விவகாரம் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் விசாரணை நடத்தியதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளதையும் அறிந்துள்ளனர்.
இதன்போது சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பகுதியிலுள்ள சிவன் கோவில் ஒன்றின் பூசாரி கோவிலுக்கு வரும் பெண்களையும் சிறுமிகளையும் பக்தி வசப்படுத்துவது போல் வசப்படுத்தி அவர்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளது கூறப்படுகிறது.
சிவனின் லிங்கம் எனத் தெரிவித்து தனது ஆண் உறுப்பை தொட்டு பெண்களை வணங்கச் செய்தும் சிவனால் ஆசீர்வதிக்கப்படுகின்றீர்கள் என கூறி அவர்களின் அறியாமையை சாதகமாகப் பயன்படுத்தி வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்.
பூசாரியால் கர்ப்பமாகும் பெண்களை குறித்த குடும்பத்தினர் வேறு ஆண்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இச் சிறுமியைப் பூசாரியிடம் கொண்டு சென்றபோது பூசாரி சிவனின் லிங்க தீர்த்தம் எனத் தெரிவித்து சிறுமியின் வாய்க்குள் தனது ஆண் உறுப்பை திணித்து அதன்பின்னர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக சிறுமி தனது வாக்குமூலத் தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த பூசாரியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.