புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான தேசிய அமைப்பின் முதலாவது கூட்டம் இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று ஆரம்பமானது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட சிலர் வந்த போது அங்கிருந்த ஒருவர் “ ஊ“ சத்தம் இட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ராவய பத்திரிகையின் ஆசிரியர் ஜனரஞ்சன முதலாவதாக உரையாற்ற சட்டத்தரணி பீட்டோ பெர்னாண்டோவை அழைத்தார்.
இந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி கூட்டம் நடக்கும் மேடைக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த ஒருவர் ஊ சத்தம் இட்டார். அவரை சபையில் இருந்து வெளியேறுமாறு ஜனரஞ்சன கோரிய போதிலும் அவர் அவ்வப்போது “ஊ “ சத்தம் இட்டார்.
இதனையடுத்து அங்கு குழப்பமான நிலைமை ஏற்பட்டதுடன் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தவர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனிடையே மேடையில் பெண்களில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது சம்பந்தமாகவும் சபையில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பியதன் காரணமாக குழப்பமான நிலைமை ஏற்பட்டது.