நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வரும் நேரத்தில் சுமார் 200 அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த எண்ணிக்கை 50 ஆக குறைந்துள்ளதாகவும் தேவையற்ற விரயங்களை குறைத்ததால்தான் இந்த பலன் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நிதியமைச்சில் இன்று நடைபெற்ற 5 அரச நிறுவனங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் மீதமுள்ள 50 அரச நிறுவனங்களையும் விரைவில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற உள்ளதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் நிதியமைச்சு இந்த கூட்டு உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்து.
நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குரிய அமைச்சுக்களின் செயலாளர்களும், நிறுவனங்களின் தலைவர்களும் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.