விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதை அறியாது சிங்களமும் தமிழ் தலைவர்களும் விடும் அறிக்கைகளை பார்த்து புன்னகை பூா்த்துக்கொண்டு இருக்கும் தமிழ் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப்பற்றி முழு உலகத்தில் வாழும் சிங்களம் பயந்துக்கொண்டு இருக்கின்ற வேளையில் தமிழ் தலைமைகளோ தங்களின் சுய நலனுக்காக ஓலம் மிட்டுக்கொண்டிருக்கின்றது.
அவர் தமிழ் மக்களின் விடுதலையை நோக்கி பயணித்தபோதே ஜனநாயகத்தை பேசி தமிழனை ஏமாற்றி வாழ்கின்ற தலைமைகளின் உண்மையான உருவத்தை கண்டார்.
இந்நிலையை கண்ட பின்பே தமிழ் மக்கள் அவர்களின் தேவைகளை நோக்கி போராட வேண்டும். இல்லையேல் தேவைகளை உணர்ந்து செயல்படுபவர்களின் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையை தோற்றுவிக்க முடியாது என்பதால் சிறிது காலம் ஒதுங்கியிருப்பது சாலச்சிறந்தது என என்ற எண்ணத்தில் ஒதுங்கினார்.
அது இனவாதிகளுக்கு தீனியாகிவிட்டது. உண்மை ஒரு நாள் வெளிப்படும் அப்போது இதயக்கனி வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிவரலாம். இது தற்காலத்தின்படி கண்போனப்பின் சூரிய நமஸ்காரம் என நினைக்கலாம் ஆனால் அது உண்மைக்கு மாறானதாகும்.
தமிழ் மக்களின் காவல் தெய்வமாக இருப்பது பிரபாகரனேயன்றி வேறு யார் ? இதை சிங்களம் நன்கு உணர்ந்துள்ளது. ஒவ்வொரு இனவாத சிங்கள தலைவர்களும் காலையில் பிரபாகரனை வணங்கியே தங்களின் கடமைகளையும் ஊடக சந்திப்புகளையும் ஏற்படுத்துகின்றார்கள். ஆனால் தமிழ் தலைமைகளோ தங்களின் சுய நலத்திற்கான செயல்பாடுகளுக்கு குல தெய்வமான பிரபாகரனை பயன்படுத்துகின்றார்கள்.
குலதெய்வ வழிபாடு உறுதுணையென்பது பொதுவான நம்பிக்கையாகும் இருப்பினும் யார் அதீத நம்பிக்கையை குலதெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்களோ அவர்களுக்கே அது துணைபோகும் என்பதற்கு உதாரணமாக நாம் கவனத்திற்கொள்ளவேண்டியது தமிழ் கடவுள் கதிர்காம கந்தனே.
கதிர்காமகந்தனின் வரலாற்றை பார்த்தால் அவர் இலங்கைக்கு வந்து உதவியைகோரியது தமிழனிடமாம். ஆனால் சுய நலவிரும்பியான தமிழன் அவருக்கு உதவவில்லையாம் ஆனால் சிங்கள இனத்தை சார்ந்தவர்களே கதிர்காமத்தில் ஓர் தற்காலிக இடத்தை இலைகளினால் அமைத்து கொடுத்தார்கள் என்று சிங்கள புத்திஜீவிகள் கூறும் கதையை நினைக்கும்போது அன்று தொடக்கம் இன்றுவரை தமிழன் தனது குடும்பத்தின் சுய வாழ்விற்காகவே வாழ்கின்றான் என்பது உண்மையாகும்.
இன்றும் சிங்களவர்கள் மனம் உறுகி கோரிக்கைகளை கதிர்காமத்தில் வைத்தால் அது நிச்சயம் நிறைவேறுவதாக கூறுவது உறுதிபடுத்துகின்றது.
மகிந்த ராஜபக்ச குடும்பம் இன்றுவரை கதிர்காம கந்தனிடமே தங்களது கோரிக்கையை முதலில் முன்வைத்தபின்பே வேறு ஆலயங்களுக்கு செல்வது வழக்கமாகும்.
அதை மாற்ற நினைத்த தமிழ் தேசிய தலைவன் பிரபாகரன் தோல்வியடைந்ததாக சுய நலவாதியான தமிழ் தலைமைகள் நினைத்தாலும் அவர்உயிருடன் வாழ்கின்றார் என்பதை சிங்கள இனவாதிகள் உணர்கின்ற காரணத்தாலேயே தினமும் அவரைப்பற்றிய செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
இதை உணர்ந்த தமிழனுக்குள்ளேயே சுயநலவாத தமிழனின் நிதிவளம் உண்மையை மக்கள் முன் மறைத்துக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் சிங்கள இனவாதிகளுக்கோ தேசிய தலைவன் வாழுகின்ற இடம் நன்கு தெரியும் ஆனால் அவர்கள் உண்மையை கூறமாட்டார்கள் அது அவர்களின் திறமை.
ஆனாலும் சுய நலவாத தமிழ் தலைமையான பச்சோந்திகளோ அவரின் உண்மையான நிலவரத்தை கூறாது உயிர்உள்ளவரை சுய நலத்தை அனுபவிக்க துடிக்கின்றார்கள்.
இதன் காரணமாகவே உயிா் வாழ்கின்ற தூய தமிழ் தேசிய தலைவன் மக்கள் மனதில் மாத்திரம் ஆண்டவணைபோல் வாழ்கின்றார் இது காலத்தின் கட்டாயமா ?
பொருத்தது போதும் தலைவா நீ வா.. மீண்டும் வா… உன் சுய ருத்தவ தாண்டவத்தை ஆடு அது அரசியல் சுய நலவாதிகளை அழிக்கவேயன்றி போராடும் மக்களை காப்பாற்றவே.