தமிழ் சினிமா நூற்றாண்டைக் கொண்டாடிய நேரத்தில் இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் இப்படி சொன்னார். ‘உலக சினிமாக்கள் எதை எதையோ பேசறாங்க… ஏன் மலையாள சினிமா கூட.
ஆனா நாம இன்னும் காதலைத்தான் அதிகம் சொல்லிட்டு இருக்கோம்’ என்று. ஆமாம்… எதை மையப்பொருளாக சொன்னாலும் கதையில் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தே ஆக வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதாத விதியாகவே இருந்தது.
வலிந்து திணிக்கப்படும் காதல் காட்சிகளும் டூயட் பாடல்களும் ரசிகர்களின் பொறுமையை சோதித்த நிலை இப்போது கொஞ்சம் மாறி வருகிறது.
கதைக்கு முக்கியத்துவம் தந்து கதைக்கு தொடர்பில்லாத விஷயங்களை ஒதுக்கி வருகிறார்கள் தமிழ் சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்கள்.
முக்கியமாக அம்மா கணக்கு, துருவங்கள் பதினாறு, மோ, அம்மணி, காஷ்மோரா, டிமாண்டி காலனி, பசங்க 2 என்று பெரிய சின்ன பட்ஜெட் படங்கள் கூட காதலோ டூயட்டோ இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டு வரவேற்பையும் பெறுகின்றன. இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்யமான விஷயம்தானே!