மொபைல் போன்கள் எந்த அளவுக்கு மனிதனின் வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறதோ, அதே அளவுக்கு மனிதர்களின் அழிவுக்கும் வழிவகுக்கிறது.
குறிப்பாக இளம் வயது சிறுவர், சிறுமிகளையே இது அதிகம் பாதிக்கிறது.
மொபைல் போன்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டும் அவர்கள், அதன் மூலம் பயனுள்ள தகவல்களை பயன்படுத்துவதைவிட, பயனற்றவைகளை பயன்படுத்தி ஆபத்தில் சிக்கிகொள்கிறார்கள்.
பாடசாலை ஒன்றில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்த 13 வயது சிறுமிக்கு 28 காதலர்கள்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியவுடன், வீட்டுப்பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதை விட மொபைல் போனை பயன்படுத்துவதை அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.
தனது மொபைலில் , Rose Lover என்ற பெயரில் ஒரு போல்டர் வைத்துள்ளார். அதனுள் 28 ஆண்களின் பெயர்கள் இருந்துள்ளது. அவர்களுடன் தினமும் சாட்டிங் செய்வது, இரவு நேரங்களில் மொபைலில் பேசுவதினை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த 28 ஆண்களும் இச்சிறுமியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். பதிலுக்கு இவரும் நானும் உங்களை காதலிக்கிறேன் என ஒவ்வொருவரிடமும் தெரிவித்துள்ளார்.
அதன்படியே, ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வந்த பின்னர் மொபைல் போனின் வழியாக இந்த ஆண்களோடு காதல் ராகம் பாடி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், தனது மகளின் மீது சந்தேகம் அடைந்த தாயார், இரவு தனது மகள் தூங்கிய பின்னர் அவளது மொபைல் போனை எடுத்து சோதனை செய்தததில் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த ஆண்களின் வயது 17 முதல் 25 இருக்கும். இந்த சிறுவயதிலேயே 28 ஆண்களோடு காதல் வயப்படும் அளவுக்கு நம்முடைய மகள் மோசமடைந்துவிட்டாளே என கவலையடைந்துள்ளார்.
மேலும், மொபைலை பயன்படுத்தும் அவள் எதற்காக, எப்படி பயன்படுத்துகிறாள் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என வேதனை அடைந்துள்ளார்.