கொழும்பு ஹோட்டல்களில் சாப்பிடுவது ஆபத்தானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தாமரைத் தடாக அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் ஹோட்டல்களில் உணவு தயாரிக்கும் சமையலறைகளுக்கு சென்றால், உணவை சாப்பிட முடியாது. உணவை நினைக்கவே முடியாத நிலைமை ஏற்படும்.
இவ்வாறான உணவுகளை உடக்கொள்ளும் மக்களுக்கு என்ன நேரும் என்பதனை நினைத்துப்பார்க்க முடியாது.
எனவே உணவை உற்பத்தி செய்வோர் மனிதத்தின் நாமத்தின் நுகர்வோரைக் கருத்திற்கொண்டு உணவு தயாரிக்கப்பட வேண்டும்.
நுகர்விற்கு ஏற்ற வகையில் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
மனிதம் பற்றி கரிசனை கொள்ளாதவர்கள், மனிதனுக்கு அழிவினை ஏற்படுத்தும் வகையிலேயே இன்று உணவுத் தயாரிப்பிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஓர் பாரதூரமான குற்றச் செயலாகும்.
எதிர்காலத்தில் நுகர்வோரின் உரிமைகளை உச்சளவில் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.