ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கணிசமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அமெரிக்கா அதில் தொடர்ந்து இணைந்திருக்காது என அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் தற்போது இடம் பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா தொடர்ந்து பங்கேற்கும் என றெக்ஸ் ரில்லர்சன் எட்டு அனைத்துலக மனித உரிமை அமைப்புகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிரியா தொடர்பான சுதந்திர விசாரணை ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும்.
ஈரான், வடகொரியா, மியான்மார் , சித்திரவதை மற்றும் கருத்து வெளிப்பாடு குறித்த சிறப்பு விசாரணையாளர்களுக்கான ஆணை ஆகியன குறித்து முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், தென்சூடானில் மனித உரிமை ஆணையத்தைப் புதுப்பித்தல், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதை ஊக்குவிப்பதற்கான ஐ.நா உதவிகள் தொடர்வதை உறுதிப்படுத்தல் என்பனவற்றையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கு எதிரான பேரவையின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ள அவர், மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான கால எல்லையினை குறிப்பிடவில்லை.