பின்னர், நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-
சினிமா துறையை காப்பாற்றவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை. பட தயாரிப்பு தொழிலில் நடிகர்கள், இயக்குனர்களும் உள்ளனர். சில பட தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வெளியிட முடியவில்லை. சில படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
இதில் நிறையபேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது உள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற 100 சதவீத வாய்ப்புகள் எங்களது அணிக்கு உள்ளது.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் சம்பந்தமாக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவை கேட்க உள்ளோம். தமிழக அரசியல் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான துணிச்சலான கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவது பாராட்டுதலுக்குரியது.
இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.
பின்னர், நடிகர் விஷாலும் மற்றவர்களும் தங்களது அணி சார்பில் போட்டியிடும் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர்.