Loading...
நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாகி திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோனார்கள். இந்நிலையில், தற்போது சினிமாவில் பிசியான நடிகையாகிவிட்ட நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அப்படி நயன்தாரா நடித்து வருடம் படங்களில் ஒன்றுதான் ‘கொலையுதிர்காலம்’. இப்படத்தை ‘பில்லா-2’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்யவிருக்கின்றனர்.
Loading...
இந்தி ரீமேக்கை சக்ரி டோலட்டியே இயக்கவிருக்கிறார். ஆனால், தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அப்படத்தின் வில்லனாக பிரபுதேவா நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. பிரபுதேவா சமீபகாலமாக இயக்கும் பணியை விட்டுவிட்டு நடிகர், தயாரிப்பாள் என களறமிங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...