மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று காலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிம்.என்.நௌபர் என்ற நபரே இன்று காலை கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக கோளாறு காரணமாக அவர் இன்றைய தினம், கண்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரண தண்டனை கைதி பொட்ட நௌபர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொட்ட நௌபர் என்ற மொஹமட் நியாஸ் நௌபர் திடீர் சுகவீனம் காரணமாக இன்று முற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக கோளாறு காரணமாக அவர் கண்டி போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன் நௌபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.