பாலியல் துன்புறுத்துதலால் கேள்விக்குறியான சூழ்நிலையிலேயே அவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது பற்றி பேசிய அவர், நானும் நவீனும் சில வருடமாகவே காதலித்து வந்தோம். திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தோம்.
பாரம்பரிய முறைக்காக நவீன் வீட்டில் இருந்து என்னை பெண் பார்க்க வந்தார்கள். எங்கள் இருவீட்டு உறவினர்களும் பேசிக்கொண்டிருந்தபோது மோதிரம் மாற்றிக்கொள்ளளாம் என்று சொன்னார்கள். அது அப்படியே நிச்சயதார்த்தம் போல நடந்துவிட்டது.
திருமணம் நடக்கும் வரை நிச்சயதார்த்தம் நடந்ததை வெளியே சொல்லவேண்டாம் என நினைத்தேன். ஆனால் போட்டோக்கள் எப்படியோ இணையதளத்தில் வெளியாகிவிட்டது. அதன் பிறகு போனில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
திருமணத்திற்கு நண்பர்கள், சினிமாவை சேர்ந்தவர்கள் என பலரையும் அழைத்து சிறப்பாக நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளேன் என பாவனா கூறியுள்ளார்.