உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல விடயங்களுக்கு தடை இருந்து வருகின்றன. அப்படி முக்கிய நாடுகளில் செய்யப்பட்டுள்ள மிக முக்கிய தடைகளை காண்போம்
பிரான்ஸ்
பிரான்ஸில் தக்காளி கெட்சப் சாஸ் பள்ளிக்கூட கேண்டீன்களில் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் மாணவர்கள் அதற்கு அடிமையாக இருப்பது தான். பிரஞ்ச் பிரைஸ் உணவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் கடந்த 1992லிருந்து சிவிங்கம் (Chewing Gum) தடை செய்யப்பட்டுள்ளது. நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
பொலிவியா
உலக புகழ்ப்பெற்ற McDonald’s உணவகம் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. அதில் நல்ல உணவில்லை என இந்த தடை அமலுக்கு வந்தது.
சவுதி அரேபியா
இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது என இந்த நாட்டில் காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை.
இத்தாலி
இத்தாலியின் மிலான் நகரில் மருத்துவமனை மற்றும் இறுதி சடங்கு நடக்கும் இடங்களை தவிர வேறு எங்கும் மக்கள் சோகமாக இருக்க கூடாது என்ற சட்டம் உள்ளது. மேலும் வாகனம் ஓட்டும் போது முத்தம் கொடுக்க கூடாது என்ற சட்டமும் அங்கு உள்ளது.
அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவில் சரியான உரிமை பெற்ற எலக்டிரீஸியன்ஸ் மட்டுமே விளக்குகளை மாற்ற முடியும். இதை மீறினால் $10 அபராதம் விதிக்கப்படும்.
வட கொரியா
வட கொரியாவில் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் வைத்திருந்தால் அது குற்றமாகும்.
பிரித்தானியா
பிரித்தானியாவின் பாரளுமன்றத்தில் உயிரிழப்பது குற்றமாகும். இது அரண்மனையாக பார்க்கப்படுவதால் இது குற்றமாக கருதப்படுகிறது.