பெண்களை விட அதிகளவு முடி உதிர்தல் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் ஆண்களே.
இதனால் இளவயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுகிறது.
எண்ணெய் மசாஜ்
வாரத்திற்கு இருமுறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயினை தலையில் தேய்த்து ஊறவைத்து குளிப்பதால் முடி உதிர்வு குறையும்.
தேங்காய் பால்
தேங்காய்பால், முடி வளர்ச்சியினை அதிகரித்து வறட்சியினைக் குறைக்கிறது. இதன் மூலம் முடி மென்மையாக மாறும்.
காற்றாழை ஜெல்
வாரம் இருமுறை முடியின் வேரில் படுமாறு தேய்த்து குளித்தால், முடி உதிர்வு குறைந்து வலிமையாக வளரும்.
வேப்பிலை
வேப்பிலையினை அரைத்து அதனுடன் தேன், ஆலிவ் ஆயிலை கலந்து முடி வேரில் படுமாறு தேய்த்து குளித்து வந்தால் முடி வேரில் உள்ள அல்கலைன் சீராகி முடி உதிர்வு குறையும்.
முட்டை
வாரம் 3-4 முறை முட்டையினை கிண்ணத்தில் ஊற்றி நன்கு அடித்து ஈரப்பதமுள்ள முடியில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதன் மூலம் முடிக்கு தேவையான புரோட்டீன் கிடைத்து நன்கு அடர்த்தியாகவும் வலிமையுடனும் வளரும்.
வெந்தயம்
சிறிது வெந்தயத்தினை 8-10 மணி நேரம் ஊறவைத்து அரைத்து தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைந்து, பொடுகு தொல்லை தீரும்.
ஆரஞ்சு
வாரம் ஒரு முறை ஆரஞ்சு பழத்தோலை அரைத்து முடியின் வேரில் படுமாறு தேய்த்து வந்தால் முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, பொடுகு தொல்லை தீரும்.
மருதாணி இலை
மருதாணி இலையினை அரைத்து முடியில் தடவி 3 மணி நேரம் ஊற வைத்து குளித்தால் முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறினை தேங்காய் எண்ணெய்யில் பிழிந்து முடியின் வேரில் படுமாறு தேய்த்து 3-4 மணி நேரம் ஊற வைத்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
மயோனஸ் மற்றும் முட்டை
முட்டை மற்றும் மயோனஸினை கலந்து முடியில் தேய்த்து 30 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பு போட்டு குளித்தால் அழகான மென்மையான முடியினை பெறலாம்.
தேன்
தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் முடி ஆரோக்கியமாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும்.
செம்பருத்தி மற்றும் கருவேப்பிலை
முடி வளர்ச்சிக்கு அதிகமாக உதவும் கருவேப்பிலை மற்றும் செம்பருத்தியை அரைத்து தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து காலை வரை ஊறவைத்து குளிக்கலாம்.
தயிர்
பொடுகைக் குறைப்பதற்கு 2 ஸ்பூன் மிளகு தூளை தயிரில் கலந்து முடியில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு குளிப்பதால் பொடுகு தொல்லை தீருவதோடு, வறட்சியும் தீரும்.
பேக்கிங் சோடா
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவினை ஷாம்புவுடன் கலந்து குளிப்பதால் பொடுகு தொல்லை தீரும். முடி வளர்ச்சி அதிகரிக்கும்.