Loading...
உடலில் ஏற்படும் பல்வேறு உபாதை பிரச்சனைகளை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான வழிகள் இதோ!
Loading...
- துளசி இலைகள் போட்டு ஊறவைத்த நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படுவது தடுக்கப்படும்.
- தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து உணவு சாப்பிட்ட பின் குடித்து வந்தால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.
- உடல் எடையை குறைக்க 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை 1 டம்ளர் நீரில் கலந்து, இதை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
- காலை உணவு சாப்பிடுவதற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு 4 மாதங்கள் செய்தால். உடல் எடை விரைவில் குறையும்.
- தினமும் காலையில் 4 மாதங்கள் தொடர்ந்து 12 கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால், 3 மாதங்களில் உடல் பருமனில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- அன்றாட உணவில் அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைத்து, கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.
- 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால், கடுமையான இருமல் பிரச்சனை குணமாகும்.
- தாங்கமுடியாத பல்வலி குறைய 2 துளசி இலை, சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தினால், வலி குறையும்.
- சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேன் கலந்து கொடுத்தால் விரைவில் குணமாகும்.
- கேரட் மற்றும் தக்காளிச் சாறுடன், தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமையாக இருக்கும்.
- வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
Loading...