Loading...
நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால் நோய்த் தொற்றுக்கள் அதிகரித்து பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகக்கூடும்.
எனவே உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை எப்போதும் வலிமையுடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு பற்கள் – 8
- தேன் – 200 மிலி
- ஆப்பிள் சீடர் வினிகர் – 200 மிலி
செய்முறை
முதலில் பூண்டின் தோலை நீக்கிவிட்டு, பூண்டு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
Loading...
பின் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, மூடி 5 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
ஆனால் தினமும் மறக்காமல் அந்த கண்ணாடி பாட்டிலைத் திறந்து அந்த கலவையை நன்கு கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து விட வேண்டும்.
குடிக்கும் முறை
இந்த பேஸ்ட்டை ஒரு நாளைக்கு 2 ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
நன்மைகள்
- நமது உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை அதிகரிப்பதால், நோய்த் தொற்றுக்களின் அபாயம் குறையும்.
- ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பானத்தைக் குடிப்பதால், அதன் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு உட்பொருட்கள் நோய்க் கிருமிகளின் தாக்கத்தை குறைத்து, சிறுநீரக கற்களைக் கரைக்கிறது.
Loading...