Loading...
ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மதுசூதனன் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் எம்.எல்.ஏவாக இருந்த ஆர்.கே நகர் தொகுதி காலியானது.
இதையடுத்து வரும் 12ஆம் திகதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Loading...
இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வீனஸ் காலனி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அவை தலைவரான மதுசூதனன் ஏற்கனவே 1991ல் ஆர்.கே நகர் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Loading...