விஷாலுடன் இப்போது துப்பறிவாளன் என்ற படத்தை இயக்குகிறார் மிஷ்கின். அதனாலேயே என்னவோ, விஷால் இருக்குமிடத்தில் எல்லாம் மிஷ்கின் இருப்பது வழக்கமாகி விட்டது.
கொஞ்ச நாளைக்கு முன்னால் தான் விஷால் விஷம் அல்ல, அவர் சிவன் என்று ஈஷா குருவை வம்புக்கு இழுத்தார். இந்நிலையில், விஷாலுடன் கோயம்புத்தூர் சென்ற மிஷ்கின் மீடியா சந்திப்பில் சேரனின் கடிதத்திற்கு பதில் தந்தார்.
“தனிமனித தாக்குதலில் ஏன் சேரன் ஈடுபடுகிறார்? விஷால் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கள் வருத்தமாக இருக்கிறது. சேரன் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அதை தெரிவிக்க விருப்பமில்லை.
இந்த தயாரிப்பாளர் தேர்தலுக்கு விஷால் அணியில் போட்டியிடும் அணி, படித்தவர்கள், இளைஞர்கள். இருக்கிற, இருந்த, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்ன பண்ணப்போறோம்கிறது தான் இங்க முக்கியம்.தனி மனித குற்றசாட்டுகளை வைக்காதீர்கள்.
நாங்க அப்படி பண்ணமாட்டோம். எங்களுக்கு நேரம் இல்லை.எங்களுக்கு தானமா ஒட்டு போடுங்க. நாங் நல்லது செய்யப்போறோம்” என்று பேசினார்.