வெறும் ஐந்தே நிமிடத்தில் முகப்பொலிவு..இப்படி ஏராளமான வாசகங்ளை கூறும் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரங்களை பார்த்திருப்போம்.
ஆனால் இதெல்லாம் உண்மையா? என்றால் பதிலில்லை… செயற்கை ரசாயன அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினால் தற்போது பொலிவுக்கு கியாரண்டி.
அதுவே நாட்கள் செல்ல செல்ல ஆபத்தை ஏற்படுத்திவிடும், எனவே இயற்கையான முறையில் அழகை மெரூகூட்டலாம்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்து, கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டு பொலிவாக இருக்கும்.
க்ரீன் டீ பைகள்
குளிர்ச்சியாக உள்ள க்ரீன் டீ யின் பைகளினை கண்களுக்கு அடியில் 5-6 நிமிடங்கள் வைத்தால் கண்களுக்கு அடியில் உள்ள வீக்கம் குறையும்.
எலுமிச்சை சாறு
எலிமிச்சை சாறினை முகத்தில் தேய்த்தால், முகம் வெண்மையாக மாறுவதுடன் பளபளப்பாகவும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயினை தேய்த்தால் சருமம் ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் இருக்கும்.
மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றினை கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ச்சியான நீரில் கழுவினால், முகச்சருமத்தின் மென்மை அதிகரித்து சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
பால், எலுமிச்சை சாறு மற்றும் தேன்
ஒரு ஸ்பூன் பால், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றினை கலந்து குளிப்பதற்கு முன் தினமும் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மென்மையாகும்.
நகத்திற்கு டூத் பேஸ்ட்
நகங்களினை சுத்தம் செய்வதற்கு டூத் பேஸ்ட்டினை உபயோகித்தால் நகம் வெண்மை நிறமாக மாறும்.
உருளைகிழங்கு சாறு
உருளை கிழங்கு சாற்றினை முகத்தில் தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள மாசுக்களை அகற்றி, கருவளையத்தினை குறைத்து புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.
ஆப்பிள் சாறு வினிகர்
முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கறைகளை நீக்குவதற்கு ஆப்பிள் சாறு வினிகரை பயன்படுத்தலாம்.
ஆப்பிள் மற்றும் பப்பாளி
ஆப்பிள் மற்றும் பப்பாளியினை அரைத்து முகத்தில் தேய்த்தால் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பளபளப்பாக சருமத்தினை மாற்றுகிறது.
பனிக்கட்டி
பனிக்கட்டியினை முகத்தில் வைப்பதினால் இரத்தஓட்டம் சீராகி சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்லும் போது மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கவும், முகம் பொலிவுடன் இருக்கவும் பனிக்கட்டியினை பயன்படுத்தலாம்.