ரயில் பாதையில் புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்துக்கொண்டிருந்த கறுப்பின கர்ப்பிணி அழகி ஒருவர், ரயில் மோதி பலியான சம்பவம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
பத்தொன்பது வயதே நிரம்பிய ஃப்ரெட்ஸானியா தோம்சன் என்ற இந்தப் பெண் கறுப்பினத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் களையான முகம் மற்றும் சீரான உடற்கட்டு கொண்டவர். எனவே, மொடலிங் துறையில் நுழையும் ஆசை ஃப்ரெட்ஸானியாவுக்கு உண்டானது.
இதற்காக ஒரு ‘போட்டோ ஷூட்’ நடத்தி, தனது புகைப்படங்களை மொடலிங் முகவர் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க நினைத்தார் ஃப்ரெட்ஸானியா.
வழக்கம்போல இல்லாமல் சற்று வித்தியாசமான பின்னணியில் இந்த புகைப்படப் பிடிப்பு நிகழ்வை நடத்த நினைத்த அவர், ரயில் பாதைக்கருகில் நின்றுகொண்டு இருந்தார். புகைப்படக் கலைஞரின் கட்டளைக்கேற்ப பல்வேறு நிலைகளில் இரண்டு ரயில் பாதைகளுக்கு மத்தியில் நின்றவாறு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு பாதையில் ரயில் வருவதைக் கண்ட அவர், மறு பாதைக்குத் தாவினார். ஆனால் அந்தப் பாதையில் மற்றொரு ரயில் வந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் அதை அறிந்திராததால் பரிதாபகரமாக ரயில் மோதி பலியானார்.
மேலே வலதுபுறமுள்ள புகைப்படமே ஃப்ரெட்ஸானியாவின் கடைசிப் புகைப்படம்!