வரவைக்காட்டிலும் செலவு கூடும் நாள். வாகனப் பழுதுகளால் வாட்டம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரிப்பது நல்லது. வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை உருவாகலாம்.
பிரிந்து சென்றவர்கள் பிரிய முடன் வந்திணையும் நாள். கனி வாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வரு மானம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
கடன்சுமை குறையும் நாள். நல்லவர்களின் தொடர்பு கிடைத்து நலம் காண்பீர்கள். லாப நோக்கத் தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். பதவியில் உள்ளவர்களால் உதவி கிட்டும்.
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாளைய விருப்பம் நிறைவேறும்.
கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வசதியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வருங் கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள்.
நட்பு வட்டம் விரிவடையும் நாள். வீண் செலவுகள் குறையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள்.
வங்கிச் சேமிப்பு உயர்ந்து வளம் காணும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடி யாகச் செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
பணவரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி உண்டு. பூமி சம்மந்தப்பட்ட வகை யில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும்.
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு. சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மாலை நேரம் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரலாம்.
தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். திறமை பளிச்சிடும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலை விரிவு படுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உடல்நலம் சீராகும்.
குழப்பங்கள் அகலும் நாள். அந்நிய இனத்தாரால் ஆதாயம் உண்டு. கட்டிடப் பணிக்கு அஸ்தி வாரமிடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியப் பேச்சுக்கள் முடிவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படலாம்.
எதிர்பாராத விதத்தில் இடமாற்றம் வந்து சேரும் நாள். செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். பயணத்தால் பலன் கிடைப்பது அரிது.