வாரத்திற்கு ஒரு தடவை ஊருக்குச் செல்லுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வாரத்தில் ஒருநாள் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டுமென பிரதமர் பணித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக வாரத்தில் ஓர் நாள் தங்களது தேர்தல் தொகுதிகளில் தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதல் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான அடிப்படையை உருவாக்குவதற்கு இவ்வாறு பிரதமர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
சித்திரை புத்தாண்டு காலத்தின் பின்னர் பிரதமரின் அறிவுறுத்தல்களை அமுல்படுத்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.