இதற்கு இயக்குனர் ராஜ மவுலி, தயாரிப்பாளர் கரண் ஜோகர் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி மும்பையில் நேற்று நடைபெற்ற ‘பாகுபலி-2’ டிரெய்லர் வெளியீட்டு விழாவின்போது, கரண் ஜோகர் பேசியதாவது:-
ஒரு இயக்குனராக, மனிதநேயமுள்ளவனாக, நமது மதிப்புமிக்க, அற்புதமான நாட்டின் குடிமகனாக இந்த சம்பவம் என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்கிறது. என்னுடைய ஆதரவு, சிந்தனை மற்றும் எண்ணம் ஆகியவை சஞ்சய் லீலா பன்சாலியுடன் இருக்கும். இதுபோன்ற ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம், மற்றொரு தயாரிப்பாளருக்கு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறோம்.
இவ்வாறு கரண் ஜோகர் தெரிவித்தார்.
இயக்குனர் ராஜ மவுலி பேசுகையில், “கருத்து சுதந்திரம் என்பது நமது அடிப்படை உரிமை. ஒரு கலைஞனாக தன்னுடைய கனவை வெளிப்படுத்த சஞ்சய் லீலா பன்சாலிக்கு சுதந்திரம் இருக்கிறது” என்றார்.